தமிழோசை மன்றம்

Saturday, January 14, 2012

பயர்பாக்சில் தரவிறக்கம் முடிந்ததும் கணினியை மூட Auto Shutdown NG 0.9 நீட்சி..!!!

வணக்கம் நண்பர்களே.. நாம் பயன்படுத்தம் பயர்பாக்ஸ் உலாவியில் தரவிறக்கம் செய்துமுடித்ததும் தானாக கணினியை மூட ஒரு அருமையான நீட்சி உள்ளது. அதாவது ஒரு பெரிய கோப்புகளையோ, அல்லது வீடியோக்கள், போன்றவற்றை தரவிறக்கும் போது அது தரவிறங்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அவ்வாறு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்போது நீண்ட நேரம் நாம் கணினி முன்பு அமர்ந்திருக்க முடியாது அல்லவா? இத்தகைய சிக்கல்களைத் தீர்க்கவும், இரவு நேர நீண்ட தரவிறக்கத்தின் போது பயன்படுத்தவும் இந்த நீட்சி உங்களுக்கு உதவும்.

இந்த நீட்சியைத் தரவிறக்கம் செய்ய.. இங்கு கிளிக் செய்யவும். அல்லது மேலிருக்கும் படத்தை கிளிக் செய்யவும்.

பயன்படுத்தும் முறை: முதலில் இந்த இணைப்பில் சென்று இந்த நீட்சியைத் தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள். அடுத்து, பயர்பாக்ஸ் ஆட்ஆன் (Firefox addons) ல் Auto shutdown என்ற விருப்பத்தில் உங்களுடைய கணினியின் இயங்குதளம் எதுவோ அதைத் தேர்வு செய்துவிடுங்கள்..

பிறகு நீங்கள் எந்த ஒரு தரவிறக்கம் மேற்கொள்ளும்போதும், பயர்பாக்ஸ் டவுன்லோட் மேனேஜரில் புதிய Shutdown button வந்திருக்கும்.

அந்த பட்டனை ஒரு முறை கிளிக் செய்தால் தரவிறக்கம் முடிந்ததும் தானாகவே கணினியை நிறத்தத்திற்கு கொண்டுவந்துவிடும்.

உங்களுக்கு கணினி இயகத்திலேயே தொடர்ந்து இருக்க வேண்டுமெனில் இரண்டாவது முறையாக அந்த பட்டனை அழுத்துங்கள். தரவிறக்கம் முடிந்தாலும் தொடர்ந்து கணினியும் இயங்கிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு முறையும் அனைத்து தரவிறக்கங்களும் முடிந்த பிறகும் ஒரு எச்சரிக்கை செய்து காட்டும். கணினியை அணைக்கவா அல்லது தொடரவா என கேட்கும். நீங்கள் உங்கள் விருப்பத்தை அதன்மூலமும் தெரிவு செய்யலாம்.

குறிப்பாக இரவு நேரத்தில் அதிகமான கொள்ளவு கொண்ட கோப்புகளை தரவிறக்கும்போது இந்த முறையை செயல்படுத்தி விட்டு , நீங்கள் தூங்கச் செல்லலாம். காலையில் எழுந்தவுடன் நீங்கள் தரவிறக்க நினைத்த கோப்பு தரவிறங்கியதும் உங்கள் கணினி பாதுகாப்பாக அணைக்கப்பட்டிருக்கும். அதே சமயம் உங்களுக்குத் தேவையான கோப்பும் தரவிறங்கியிருக்கும்.

Ditulis Oleh : tamilosaii-soft // 6:11 AM
Kategori:

0 comments:

Post a Comment

 

alexa rank