தமிழோசை மன்றம்

Thursday, January 12, 2012

எச்சரிக்கை! மால்வேர் காரணமாக உங்கள் கணணி பாதிப்படைவதை தடுப்போம்


சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஒரு பகுதியாக நாங்கள் உங்கள் கணினி, இணைய தளம், மற்றும் தனிப்பட்ட தகவலை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.கணினியை தாக்கும் மென்பொருள் ஒன்றை பற்றி நாங்கள் பார்க்க போகின்றோம். இதனை மால்வேர் (Malware) என்று அழைக்கப்படும். இந்த மென்பொருள் தீமை இழைக்கும் என்பதால் இதனை தமிழில் “தீம்பொருள்”  அல்லது "தீமைபொருள்" என்று அழைக்கிறார்கள். இதனை உங்களுடைய கணினிக்கு அனுப்புவதன் மூலம் அந்த தீம்பொருளை உருவாக்கியவர் இணையம் மூலம் நமது தகவல்களை திருட முடியும். இனி இந்த மால்வேர்களின் செயட்பாடுக்களை பார்ப்போம்.


இந்த மால்வேர் எப்படி எம்முடைய கணணிகளை தாக்குகிறது ?
மால்வேர் நிரல்களை அல்லது மால்வேரினால் பாதிக்கப்பட்ட தளத்தில் பதிவேற்றம் செய்யபட்டுள்ள நிரல்களை எங்களுடைய இணையதளத்தில் நிறுவுவதால் நம்முடைய இணையதளத்திற்கும் மால்வேர் வந்துவிடும்.
இதனால் சிலவேளை நம் இணையதளத்தை பார்க்கும் அனைவரின் கணினியிலும் வந்துவிடும். ஆனாலும் சில மால்வேர்களினால் நமது கணினிக்கு எந்த பாதிப்பும் தருவதில்லை.மாறாக நமது இணையதளத்தை திறந்தால் அது வேறொரு விளம்பர தளத்திற்கு சென்றுவிடும். இப்படி பட்ட மால்வேர்களுக்கு ஆட்வேர் என்று அழைப்பதுண்டு.

  • தீம்பொருள் அச்சுறுத்தல்கள் எதிராக பயனர் பாதுகாக்க உதவும்.
  • கூகிள் நாம் உள்ளடக்கிய நான் வலைத்தளங்களில் தீம்பொருள் கண்டுபிடிக்கும் தானியங்கி ஸ்கேனர்கள் கட்டுகிறது.



நமது இணையதளத்தில் மால்வேர் உள்ளதா?
இதனை இலகுவாக கண்டுபிடிக்க கூகிள் தளம் நமக்கு உதவுகிறது. கூகிள் தேடலில் உங்கள் இணையதளத்தின் முகவரியைத் தேடி பாருங்கள். உங்கள் இணையதளத்தில் மால்வேர் இருந்தால் தேடல் முடிவுகளில் உங்கள் இணையதள பெயருக்கு கீழே “This site may harm your computer” என்று சொல்லும்.இதன் மூலம் இலகுவாக இனம் காணலாம்.


மேலும் http://www.google.com/safebrowsing/diagnostic?site=blogname.com
என்ற முகவரிக்கு செல்லவும். இதில் example.com என்பதற்கு பதிலாக உங்கள் இணையதள முகவரியை கொடுக்கவும். உங்கள் இணையதளத்தில் மால்வேர் இருந்தால் “Site is listed as suspicious – visiting this web site may harm your computer.” என்று சொல்லும். மேலும் எந்த தளத்தின் மால்வேர் உங்கள் இணையத்தை தாக்கியுள்ளது? என்றும் காட்டும்.


உங்கள் இணையதளத்தில் மால்வேர் இல்லையென்றால் ‘Google has not visited this site within the past 90 days’ என்று உங்களுக்கு காட்டபடும் .இதன் மூலம் உறுதிபடுத்தலாம்.

Ditulis Oleh : tamilosaii-soft // 7:09 PM
Kategori:

0 comments:

Post a Comment

 

alexa rank