![](http://www.z9tech.com/photos/thumbs/others/facebook_video_001.jpg)
இந்த தளத்தில் பலரும் தனது கருத்துகளை தனது புகைப்படங்கள் மூலமாகவும் தன் வீடியோக்கள் மூலமாகவும் பகிர்ந்து கொள்ளுகிறார்கள்.
இந்த தளத்தில் நம்மை கவர்ந்த வீடியோக்களை பகிர்ந்து கொள்ளுவதற்கு வசதி உள்ளது. ஆனால் அதனை பதிவிறக்கம் செய்வதற்கான வழிகளை தேட வேண்டியுள்ளது.
நம்மை கவர்ந்த பேஸ்புக் வீடியோக்களை பதிவிறக்க ஒரு பயர்பொக்ஸ் நீட்சி உதவுகிறது. இந்த நீட்சியை பயன்படுத்தி நாம் பேஸ்புக் வீடியோக்களை மிக எளிதாக பதிவிறக்கலாம்.
அது மட்டுமல்ல இதனை பயன்படுத்தி நாம் வீடியோவின் வடிவத்தையும் மாற்றலாம். நேரடியாக வீடியோவை நாம் வடிவத்தை மாற்றியே பதிவிறக்கலாம். இதனை பயன்படுத்துவதும் மிக எளிது.
இதனை பதிவிறக்கி உங்கள் உலாவியில் நிறுவிக் கொள்ளுங்கள். பின்னர் உங்கள் உலாவியை ஒருமுறை மறுத்தொடக்கம் செய்து கொள்ளுங்கள்.
பின்னர் உங்கள் பேஸ்புக் பக்கத்திற்கு செல்லுங்கள், உங்கள் உலாவியின் மேலே ஒரு பொத்தான் இருக்கும் அதனை அழுத்துங்கள். அதில் பல வசதிகள் வரும் உங்களுக்கு எது தேவையோ அதனை தெரிவு செய்யுங்கள்.
பதிவிறக்க DOWNLOAD என்ற பொத்தனை அழுத்துங்கள். வீடியோ கோப்பின் வடிவத்தை மாற்ற DOWNLOAD & CONVERT என்ற பொத்தானை அழுத்துங்கள்.
பின்னர் ஒரு விண்டோ வரும் அதில் உங்களுக்கு விருப்பமான வடிவத்தை(FORMAT) தெரிவு செய்யுங்கள். பின்னர் எங்கு பதிவிறக்க வேண்டுமோ அந்த இடத்தை தெரிவு செய்யுங்கள். அவ்வளவு தான் உங்கள் வீடியோ பதிவிறக்கப்படும்.
தரவிறக்க சுட்டி
0 comments:
Post a Comment