தமிழோசை மன்றம்

Saturday, June 30, 2012

கோப்புகளை கட்,பேஸ்ட்,காப்பி மற்றும் அழிக்க விடாமல் தடுக்க

நாம் அவரவர் கணிணியில் பல கோப்புகளை வைத்திருப்போம் அவற்றில் நமக்கு தேவையான அல்லது முக்கியமான பல கோப்புகள் இருக்கும்.நாம் கணிணியை விட்டு அகன்றிருக்கும் போது யாராவது அதை தெரியாமல் அழிக்கவோ அல்லது நமக்கு தெரியாமல் காப்பி செய்து கொள்ளவோ முடியும்.இதை தடுக்க Prevent என்ற இந்த மென்பொருள் பயன்படுகிறது.

இந்த மென்பொருளை நிறுவிய பின் இயக்கினால் கீழ்க்கண்ட Window தோன்றும்.


இதில் Define Hotkey என்பதில் உங்களுக்கு எளிதான அல்லது நினைவு கொள்ளகூடிய வகையில் எதாவது Key தேர்வு செய்து கொள்க. உதாரணமாக Ctrl + B அல்லது Ctrl + C என ஏதாவது தேர்வு செய்து கொள்க.

தேர்வு செய்த பின் Activate என்ற பட்டனை அழுத்துக.பின் கீழ்க்கண்ட Window தோன்றும்.

இதில் OK கொடுத்த பின் நீங்கள் எந்தவொரு கோப்புகளையும் கட்,பேஸ்ட்,காப்பி மற்றும் அழிக்கவோ முடியாது.மேலும் கோப்பின் மேல் Right Click செய்து பார்த்தாலும் அனைத்து வசதிகளும் முடக்கப்பட்டிருக்கும்.கீழே உள்ள படத்தை பார்க்க.


உங்களுக்கு கோப்புகளை அழிக்க வேண்டுமானால் முன்பு தேர்வு செய்த key அழுத்தினால் போதும்.அதாவது முன்னர் Ctrl +B கொடுத்திருந்தால் அதை தற்போது அழுத்தினால் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடும்.

தற்போது நீங்கள் எந்தவொரு கோப்புகளையும் கட்,பேஸ்ட்,காப்பி மற்றும் அழிக்க முடியும்.
இந்த மென்பொருளை தரவிறக்க இங்கே கிளிக் செய்க

Ditulis Oleh : tamilosaii-soft // 8:48 PM
Kategori:

0 comments:

Post a Comment

 

alexa rank