பணம் கொடுத்து 'ஆன்டி- வைரஸ்' வாங்க முடியாதவாடிக்கையாளர்கள் தங்களுடைய மென்பொருட்களைபயன்படுத்தியாவது பார்க்கட்டுமே என்ற எண்ணத்தில்வழங்கப்படும் 'ஆன்டி-வைரஸ்' தான் "இலவசஆன்டி-வைரஸ்".
இந்தவகை மென்பொருட்களில் பணம் கொடுத்து வாங்கும் ஆன்டி-வைரஸில்இருப்பதை விட கொஞ்சம் குறைவான பாதுகாப்பு வசதிகள்கொடுக்கப்பட்டிருக்கும்,சில வாடிக்கையாளர்கள் தங்கள் கணினுக்குமுழுமையான பாதுகாப்பு வேண்டும் என்ற எண்ணத்தில் பணம் கொடுத்தேஆன்டி-வைரஸை வாங்கிக்கொள்வார்கள்.
ஆனால் என்னதான் பணம் கொடுத்து நாம் கணினியில் ஆன்டி-வைரஸ் போட்டுக்கொண்டாலும் புதுபுது வைரஸ்களின் அட்டகாசம் இன்றைக்கும் தாங்கமுடியாததாகத்தான் உள்ளது.
குறிப்பாக நாம் இணையதளங்களில் உலவும்போது கண்டிப்பாக வைரைஸ்களின்தொல்லைகள் அதிகமாக இருக்கும்.அவை நாம் இணையதளங்களிருந்து ஏதாவதுதரவிறக்கம் செய்யும்போது வைரஸும் அதன் கூடவே சேர்ந்து வந்து நம்கணினியில் உட்கார்ந்து கொள்ளும்.
இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம்வெளியிட்டிருக்கும் (வந்து கொஞ்ச நாள் ஆன) இலவச Microsoft Security Essentials என்ற மென்பொருள்.
பல கணினி உபயோகிப்பாளர்கள் பயன்படுத்தி பார்த்த வரையில் மிக அதிகபட்சபாதுகாப்பை வழங்கும் ஆன்டிவைரசாக Microsoft Security Essentialsமென்பொருள் செயல்படுகிறது.குறிப்பாக இணையதளங்களில் நாம்உலவும்போது இந்த ஆண்டிவைரஸ் அதிகபட்ச இணைய பாதுகாப்பை நமக்குதருகிறது.இந்த இலவச ஆன்டிவைரஸ்' நாம் பணம் கொடுத்து வாங்கும்ஆன்டிவைரஸ் தரும் அதிகபட்ச பாதுகாப்பை ஒத்த பாதுகாப்பை நமதுகணினுக்கும் வழங்குகிறது.
அது மட்டுமல்லாமல் அதுவே தானாக அடிக்கடி புதுப்பித்துக் கொள்வதால் நமதுகணினிக்கு நல்ல பாதுகாப்பும் கிடைக்கிறது,இந்த ஆன்டிவைரஸை பயன்படுத்திப்பார்த்த பலபேர் இதன் செயல்திறனை வெகுவாக பாராட்டுகிறார்கள்.
0 comments:
Post a Comment