கணினியில் உள்ள வன்பொருட்கள் (Hardware) செம்மையாக வேலை செய்ய சரியான டிவைஸ் டிரைவர்கள் தேவை. டிவைஸ் டிரைவர்கள் பரியும் அவற்றை பேக்கப் எடுத்து வைத்து கொள்வது பற்றியும் ஏற்கனவே Device Driver களை பேக்கப் எடுத்து கொள்ள மென்பொருள் என்று ஒரு இடுகை எழுதி இருந்தேன்.
கணினி இயங்குதளங்கள் புதிதாக வர வர வன்பொருள் நிறுவனங்கள் அதற்கான டேவிஸ் டிரைவர்களை மேம்படுத்தி புதிதாக வெளியிட்டு கொண்டு இருக்கும். அவற்றை அடிக்கடி சோதித்து நமது கணினியில் நிறுவி கொள்ள வேண்டும். அப்போதுதான் நமது கணினி சிக்கலின்றி வேலை செய்யும்.
உங்கள் கணினியில் பல நிறுவனங்களின் வன்பொருட்கள் இருக்கும். அவை ஒவ்வொன்றாக பார்த்து அவற்றின் இணைய தளங்களுக்கு சென்று டிவைஸ் டிரைவர்களை கண்டுபிடித்து அவற்றை கணினியில் நிறுவுவது அதிக வேலை பிடிக்கும். இந்த வேலையை எளிதாக்க ஒரு மென்பொருள் உள்ளது.
டிரைவர் டாக்டர் என்பதுதான் அந்த மென்பொருளின் பெயர். அதனை வைத்து உங்கள் கணினியை ஸ்கேன்(Scan) செய்து கொண்டால், உங்கள் கணினியில் அப்டேட் செய்ய வேண்டிய டிவைஸ் டிரைவர்கள் பட்டியலை தரும். அதை தரவிறக்க தேவையான சுட்டிகளையும் தரும். அதன் மூலம் புதிய டிவைஸ் டிரைவர்களை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளாம்.
இந்த இலவச மென்பொருளை இந்த சுட்டியை கிளிக் செய்வதன் மூலம் தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள். இது விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 போன்றவற்றில் நன்றாக வேலை செய்கிறது. இந்த மென்பொருளின் போர்டபிள் வடிவத்தை இங்கே சென்று தரவிறக்கி கொள்ளலாம்.
0 comments:
Post a Comment