ஃபயர்பாக்ஸ்,குரோம் உலவிகளுக்கு போட்டியாக ராக்மெல்ட் என்ற மற்றொரு உலவி களத்தில் குதித்துள்ளது. குரோம் உலவி உருவாக்கப்பட்ட குரோமியம் என்ற ஓபன் சோர்ஸ் மூலத்திலிருந்து தான் இந்த ராக்மெல்ட் உலவியும் உருவாக்கப்பட்டுள்ளது.ஃபயர்பாக்ஸ்,குரோம் உலவிகளில் இல்லாத பல வசதிகள் இதில் உள்ளன.(படங்களை கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்க)
குரோமியம் என்ற ஓபன் சோர்ஸ் மூலத்திலிருந்து உருவாக்கப்பட்டதால் கிட்டதட்ட பார்க்க குரோம் போலவே இருக்கும் இதில் உள்ள முக்கியமான சிலவசதிகளை பற்றி பார்ப்போம்.
உங்கள் facebook நண்பர்களை எளிதாக இனி நீங்கள் கையாளலாம்.இந்த உலவியிலேயே நீங்கள் facebook கணக்கில் நுழைந்து கொள்ளலாம்.நுழைந்தவுடன் உங்கள் நண்பர்கள் இந்த உலவியின் சைடு பாரிலேயே தெரிவார்கள்.மேலும் facebook தளத்தில் போகாமலே நண்பர்களின் செய்திகளை அறிந்து கொள்ளலாம். கீழே உள்ள படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்க
facebook கணக்கை போல் ட்விட்டர் கணக்கையும் பயன்படுத்தலாம் ,ட்வீட் செய்யலாம்.
மேலும் கூகிள் தேடல்களை தனி டேப் இல் எளிதாக காட்டுகிறது.
இந்த உலவியை டவுன்லோட் செய்து நிறுவும் போது கீழே உள்ளது போல் உங்கள் facebook கணக்கில் நுழைய வேண்டியதிருக்கும்.
இந்த உலவியில் உள்ள மேலும் பல வசதிகளை கீழே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்க.
டவுன்லோட் செய்ய இங்கே செல்க Download RockMelt Browser
0 comments:
Post a Comment