கணணியை சுத்தம் செய்வதில் CCleaner மென்பொருள் முக்கிய பங்காற்றுகிறது. இந்த மென்பொருள் பற்றி தெரியாதவர்கள் எவரும் இல்லை எனலாம்.
சமீபத்தில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு CCleaner v3.20 பதிப்பு வெளியானது. இதில் மேலதிகமாக மவுஸின் வலது கிளிக் மெனுக்களை மிக இலகுவாக சேர்க்க அல்லது நீக்குவதற்கு ஏற்ற வகையில் புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.
சிசி கிளீனரில் இதைச் செயற்படுத்துவதற்கு, Tools > Startup > Context Menu செல்ல வேண்டும். அங்கே பட்டியலிடப்பட்டுள்ள மென்பொருட்களில் தேவையானதன் மேல் கிளிக் செய்து அவை வலது கிளிக் மெனுவில் வர விரும்பினால் enabled பகுதியில் yes ஐ தெரிவு செய்ய வேண்டும்.
அல்லது அவற்றை முழுவதும் நீக்கிவிட Delete செய்யலாம். எனினும் enable இல் No கொடுத்து விட்டால் அவற்றை விரும்பும் நேரத்தில் மீண்டும் வலது கிளிக் மெனுவில் கொண்டு வந்துவிடலாம்.
0 comments:
Post a Comment