தமிழோசை மன்றம்

Wednesday, June 27, 2012

எட்டு கட்டண மென்பொருள்கள் இலவசமாக - Mega Summer Giveaway

கட்டண மென்பொருள் ஒன்று இலவசமாக கிடைத்தாலே நமக்கு சந்தோசமாக இருக்கும். ஒரே நேரத்தில் பயனுள்ள எட்டு மென்பொருள்கள் இலவசமாக கிடைத்தால் எப்படி இருக்கும்? Digiarty என்ற டிவிடி ரிப்பர்,கன்வெர்டர் மென்பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனம் மற்றும் 7 மென்பொருள் நிறுவனங்கள் சேர்ந்து கோடைகால மெகா ஆபராக அவர்களின் கட்டண மென்பொருள்களை இலவசமாகத் தருகின்றன. இதனால் திருட்டு மென்பொருளைத் தேடாமல் அவர்கள் கொடுக்கும் ஒரிஜினல் லைசென்ஸ் உரிமையுடன் பயன்படுத்தலாம்.

என்னென்ன மென்பொருள்கள் ?

1.Ad-Aware Personal Security - இணையத்தில் பாதுகாப்பாக உலவவும் மால்வேர்,ஆட்வேர் தடுக்கவும் பயன்படுகிறது.

2.Zoner Photo Studio 14 HOME - கேமராவிலிருந்து படங்களைத் தரவிறக்கவும் எடிட் செய்யவும் பயன்படுகிறது.

3.EaseUS Partition Master Pro - கணிணியில் Hard disk பார்ட்டிசன்களை உருவாக்க மாற்ற பயன்படும்

4.Kingsoft Office Writer Std 2012 - MS-Word போன்ற மென்பொருள்

5.Advanced SystemCare PRO - கணிணியை வேகப்படுத்த குறைகளைக் களையப் பயன்படுகிறது.

6.GreenCloud Printer - பிரிண்டரில் அச்சிடும் போது மை, காகிதம் போன்றவற்றை மிச்சப் படுத்தலாம்.

7.Cookie Crumble - இணையத்தில் குக்கிகளை அழிக்க உதவுகிறது.

8.WinX HD Video Converter - சிறந்த வீடியோ கன்வெர்டர், ஆன்லைனிலிருந்து Youtube வீடியோக்களைத் தரவிறக்க, டிவிடி உருவாக்கப் பயன்படும்.


எப்படி இலவசமாகப் பெறுவது?

இந்த நிறுவனங்கள் மொத்தம் 20000 எண்ணிக்கையில் மட்டுமே இலவசமாகத் தருகின்றனர். அதனால் முதலில் வருபவர்க்கே முன்னுரிமை தரப்படும். கீழே உள்ள சுட்டியில் கிளிக் செய்யவும்.

http://www.winxdvd.com/partner-offer/windows-software-giveaway.htm

அந்தப் பக்கத்தில் நடுவே Virtual Slot Machine ஒன்றும் பந்து ஒன்றும் அருகில் இருக்கும். அந்த பந்தினைக் கிளிக் செய்தால் மூன்று கட்டங்களில் படங்கள் ஓடத்துவங்கும். அவை நிற்கும் போது என்ன அமைப்பு இருக்கிறதோ அதற்கு ஏற்ற மாதிரி மென்பொருள்கள் கிடைக்கும். என்னென்ன வந்தால் என்ன மென்பொருள் கிடைக்கும் என்று அந்த Machine அருகிலேயே பார்க்கலாம்.

மேற்கண்ட அமைப்பில் வராவிட்டால் சில மென்பொருள்கள் மலிவான விலையில் தருவதாகச் சொல்வார்கள். ஆனால் ஒருவரே எத்தனை முறை வேண்டுமானாலும் பந்தைச் சுழற்றி தேவையான மென்பொருளைப் பெறலாம். நான் ஆறு தடவை பந்தைச் சுழற்றி Easus partition pro, Advances system care pro இரண்டு மென்பொருள்களைப் பெற்றேன். அதனால் குறிப்பிட்ட மென்பொருள் வரும் வரை பந்தைச் சுழற்றுங்கள்!

Ditulis Oleh : tamilosaii-soft // 5:14 AM
Kategori:

0 comments:

Post a Comment

 

alexa rank