தமிழோசை மன்றம்

Wednesday, June 27, 2012

உங்கள் வலைப்பூ கூகிள்( seo search) மூலம் அதிக ஹிட்ஸ் பெற Read more: உங்கள் வலைப்பூ கூகிள்( seo search) மூலம் அதிக ஹிட்ஸ் பெற


சக வலைத்தளமான எதிர்நீச்சலின் தகவல் படி தமிழில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் வலைபூக்கள் உள்ளன . இதில் நாளொன்றுக்கு மூன்றில் ஒரு பங்கு பதிவர்கள் ஓர் பதிவிட்டாலே தினமும் 1000திற்கும் மேற்பட்ட பதிவுகள் 
வெளியாகும் . இதில் பெரும்பான்மையான ஹிட்ஸ் தமிழ்10 , தமிளிஷ் ( இப்போ இன்ட்லி ) உளவு , மற்றும் பல்வேறு தமிழ் திரட்டி தளங்கள் மூலம் கிடைக்கின்றது . இதன் மூலம் தினமும் 200 முதல் 1000 ஹிட்ஸ் வரை பதிவுகளின் தரத்தைப் பொறுத்து கிடைக்கும் . 
திரட்டிகளின் மூலம் வரும் ஹிட்ஸ் என்பது mutual sharing ஹிட்ஸ் வகையை சார்ந்தது அதாவது நம் பதிவுகளை குறிச் சொற்களாக வாங்கி அதற்குப் பதிலாக நமக்கு ஹிட்சை வழங்குகிறது ( பழைய காலத்து பண்ட மாற்று முறை போல ). ஆனால் சில சமயம் நமக்கு போதிய வாக்குகள் கிடைக்கா விட்டால் திரட்டிகளிடம் இருந்து வரும் ஹிட்சும் குறைவாகவே இருக்கும் . 

திரட்டிகளுக்கு அடுத்ததாக நமக்கு அதிக ஹிட்ஸ் தருவது ( கூகிள் , யாஹூ , பிங் ) போன்ற search engine களே ஆகும் .எனவே இன்று எவ்வாறு இந்த சர்ச் என்ஜின்கள் மூலம் அதிக ஹிட்ஸ் பெறுவது என்று பார்க்கலாம் . பொதுவாக கூகிள் ஓர் குறிப்பிட்ட சொல்லை தேடும் போது பேஜ் ரேங்க் ( page rank ) அதிகம் உள்ள வலைபதிவுகளையே முன்னிலைப் படுத்தும் . உதாரணமாக நண்பர் கேபிள் சங்கர்சினிமாவிமர்சனங்கள் எழுதுவதில் கில்லாடி , தினமும் அவர் பதிவுகளை அதிக எண்ணிக்கையில் உள்ள வாசகர்கள் படிப்பதால் அவர் பேஜ் ரேங்க்கும் அதிகமாக இருக்கும் .எனவே அவர் பதிவுகள் கூகிள் சர்ச்சில் முன்னணியிலேயே இருக்கும் . ஆனால் புதிய பதிவர்கள் / மற்றும் பேஜ் ரேங்க் குறைவாக உள்ள பதிவர்களுக்கு கூகிள் சேர்ச் மூலம் வரும் ஹிட்ஸ் மிக சொற்பமானதே ஆகும் . ஆனால் இதை ஓர் சிறிய trick மூலம் எளிதாக தீர்க்கலாம் .

பொதுவாக உங்கள் வலைபதிவுகளில் உங்கள் வலைப்பதிவின் பெயரும் - அன்றைய பதிவின் பெயரும் சேர்ந்தே இருக்கும் .( blog name > blog post title ) உதாரணமாக ( கவியின் காதலன் -அசடு வழியும் கலை ), இதை அப்படியே மாற்றி விட்டால் (அசடு வழியும் கலை - கவியின் காதலன் ) அதாவது முதலில் பதிவின் பெயரும் அதன் பின்பு உங்கள் வலைப்பக்கத்தின் பெயரும் வருவது போன்று இருந்தால் நிச்சயம் நீங்கள் எழுதும் பதிவுகள் முன்பு இருந்ததை விட கூகிளால் அதிக அளவில் திரட்டப்பட்டு , அதிக ஹிட்சும் பெறுவீர்கள் . இதை உங்கள் வலைப்பக்கத்தில் செயல் படுத்த


#-முதலில் உங்கள் பிளாக்கர் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
#-Design- EditHtml - Expand Widget Template செல்லவும்- (இதற்கு முன் உங்கள் டெம்ப்ளேட்டை ஒருமுறை Backup செய்து கொள்ளுங்கள்)


<title><data:blog.pageTitle/></title>


#-அதில்மேலே குறிப்பிட்டு இருக்கும் html code ஐ கண்டறிந்து அதற்குப் பதிலாக கீழே இருக்கும் html code ஐ மாற்றி விடவும் .

<b:if cond='data:blog.pageType == &quot;index&quot;'>
<title><data:blog.title/></title>
<b:else/>
<title><data:blog.pageName/></title>
</b:if>



#-உங்கள் template ஐ சேவ் செய்து விடவும் .


அவ்வளவு தான் இனி உங்கள் பதிவு முன்பு இருந்ததை விட அதிக ஹிட்ஸ் பெறுவதை கண்கூடாக காணலாம் .பதிவு பிடித்திருந்தால் ஒரு ஒட்டு போடவும் . மேலும் தமிழ் திரட்டி தளங்களின் ஒட்டுபட்டைகள் அனைத்தையும் ஒன்றாக இணைப்பது எப்படி என்பது பற்றி படிக்க இங்கே செல்லவும் .


Read more: உங்கள் வலைப்பூ கூகிள்( seo search) மூலம் அதிக ஹிட்ஸ் பெற 

Ditulis Oleh : tamilosaii-soft // 5:47 AM
Kategori:

0 comments:

Post a Comment

 

alexa rank