தற்போது இணையம் வீட்டில் கணினி வைத்திருப்பவர்கள் அனைவராலும் பெரும்பான்மையாக பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொவரும் அவர்களுக்கு தேவையானவற்றை உதாரணமாக songs,ebooks,ringtones,wallpaper டவுன்லோட் செய்வது உண்டு . பல கோப்புகளை டவுன்லோட் செய்யும் போது ஒரே மாதிரியான கோப்புகள் மீண்டும் டவுன்லோட் செய்ய வாய்ப்பு உண்டு. அதாவது Duplicate ஆக வாய்ப்பு உண்டு.இதே போல் பல இரட்டையான கோப்புகள் உங்கள் கணினியில் இருக்கலாம். இது போன்ற இரட்டையான கோப்புகளை நாமே தேடி பிடித்து அழிப்பது மிகவும் கடினம். இவைகளை அழிக்க ஒரு மென்பொருள் உள்ளது பெயர் Auslogics Duplicate File Finder
இந்த மென்பொருளில் உங்களுக்கு தேவையான Folders,Drives தேர்வு செய்து இரட்டையான கோப்புகளை கண்டுபுடிக்கலாம்.
மேலும் பெயர் மட்டுமன்றி Size,Content மற்றும் தேதி ஆகியவற்றை வைத்தும் இரட்டையான கோப்புகளை கண்டுபுடிக்கும் வசதி இதில் உண்டு.
இந்த மென்பொருளை இங்கிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
0 comments:
Post a Comment