தமிழோசை மன்றம்

Thursday, July 5, 2012

இணையத்தில் ஒரு கணணி வியத்தகு இணையவழி இலவச இயங்குதளம்


ஆச்சரியப்படகூடியவிதத்தில் இணையத்தில் கணணியை உருவாக்கியுள்ளார்கள் இணைய வல்லுனர்கள். இந்த இணையத்தில் கணணி என்பது (A computer in a web page) நீங்கள் கணணியை ஆரம்பித்து கடவுச்சொல் வழங்கி கணணி திறக்கும் போது கணணித்திரை (Desktop) எமது கண்களுக்கு எவ்வாறு புலப்படுகின்றதோ அவ்வாறு http://g.ho.stஎன்னும் இணையத்தளத்தில் இணையக்கணணி என்று அழைக்கப்படக்கூடிய விதத்திலே இவ் இணையத்தளமானது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இணையக்கணணி தளத்திலே 15GB கொள்ளளவுடைய G.ho.st Drive என்னும் சேமிப்பகம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 10GB கொள்ளளவுடைய மின்னஞ்சல் ஒன்றும் தருகின்றது. அத்துடன் ஆவணங்களை,தரவுகளை உருவாக்கக்கூடிய விதத்திலே Zoho Editor,Zoho sheets போன்ற மென்பொருட்கள் காணப்படுகின்றன. கணணித்தகவல்களை நிர்வகிக்ககூடிய விதத்திலே கட்டுபாட்டு தளம் (Control panel) போன்ற பல பகுதிகளும் காணப்படுகின்றன. கணணி ஒன்றுக்கு தேவையான அடிப்படை மென்பொருட்கள் பலவும் இதில் காணப்படுகின்றன. அத்துடன் மேலும் பல வசதிகளும் இதில் காணப்படுகின்றன. இது ஒரு முற்று முழுதான இலவசமான தளம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதொரு சிறப்பான அம்சமாகும்.





Ditulis Oleh : tamilosaii-soft // 3:32 AM
Kategori:

0 comments:

Post a Comment

 

alexa rank