Rapidshare தளத்தை அறியாதவர்கள் தற்போது இருக்க முடியாது. Files சேகரித்து வைக்கும் பிரபலமான தளமாக செயல்பட்டுவருகிறது.மேலும் Files டவுன்லோட் செய்ய உதவுகிறது.இதில் Files டவுன்லோட் செய்ய இரு முறைகள் உள்ளன.
ஒன்று பணம் செலுத்தி Premium உறுப்பினராக சேர்ந்து Files டவுன்லோட் செய்யலாம் . மற்றொன்று உறுப்பினராக சேராமல் இலவசமாக டவுன்லோட் செய்யலாம்.இரண்டாவது முறையில் பல கட்டுப்பாடுகள் உள்ளன.ஒரு முறை டவுன்லோட் செய்த பிறகு மீண்டும் அடுத்த File டவுன்லோட் செய்ய முடியாது . சிறிது நேரம்கழித்தே செய்ய முடியும் . மேலும் குறிப்பிட்ட அளவு Files மட்டுமே ஒரு நாளில் டவுன்லோட் செய்ய முடியும் .
ஒரு வீடியோ டவுன்லோட் செய்ய வேண்டுமானால் அது ஒன்றுக்கு மேற்பட்ட Files ஆக பிரித்து Rapidshare தளத்தில் Upload செய்ய பட்டிருக்கும்.எனவே அதை ஒன்றன் பின் ஒன்றாக டவுன்லோட் செய்ய வேண்டும்.ஒன்றை டவுன்லோட் செய்த பின் சிறிது நேரம் கழித்து அடுத்த ஒன்றை டவுன்லோட் செய்ய வேண்டும்.இதை ஒன்றன் பின் ஒன்றாக நாம் தான் செய்ய வேண்டும். இது சில நேரம் நமக்கு அலுப்பை உண்டு பண்ணும்.இதற்காகவே சில மென்பொருள்கள் உள்ளன.அவற்றில் சிறந்த இரண்டு மென்பொருள்களை பற்றி இங்கே காணலாம்.
jdownloader
Rapidshare மற்றும் Megaupload ஆகிய இரண்டு தளங்களில் இருந்து Files டவுன்லோட் செய்ய jDownloader உதவுகிறது.இது Java பயன்படுத்தி எழுதப்பட்ட ஒரு மென்பொருள்.இதன் மூலம் நீங்கள் டவுன்லோட் செய்ய வேண்டிய Files சுட்டிகளை இதில் கொடுத்து விட்டால் அதுவே அனைத்து Files உம் டவுன்லோட் செய்து தந்து விடும்.ஒவ்வொரு File டவுன்லோட் இடையே எவ்வளவு நேரம் காத்திருந்து டவுன்லோட் செய்ய வேண்டும் என்பதை நாம் தெரிவித்தால் போதும் அதுவே குறிப்பிட்ட இடைவெளியில் Files செய்து கொடுத்து விடும்.
நீங்கள் ஒரு வீடியோ டவுன்லோட் செய்யவேண்டுமானால் அனைத்து Links உம் இதில் கொடுத்து விட்டு சென்று விடலாம். ஒவ்வொரு முறையும் ஒரு டவுன்லோட் முடிந்த பின் கொடுக்க தேவையில்லை.இதை இங்கிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்க.
RAD (Rapidshare Auto Downloader)
jDownloader போலவே இன்னொரு மென்பொருள் RAD.இதுவும் Rapidshare தளத்தில் இருந்து Files டவுன்லோட் செய்ய உதவுகிறது.jDownloader போலவே அனைத்து வசதிகளும் இதிலும் உள்ளது.இதை இங்கிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
0 comments:
Post a Comment