சில குறிப்பிட்ட நோக்கத்துக்காக பல வகையான கோப்புகள் பயன்படுத்தப் படுகின்றன இதானல் நாம் குறிப்பிட்ட வகையான கோப்பினை வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை நாம் எந்த வகையான கோப்பினையும் நாம் விரும்பும் வண்ணம் பயன்படுத்தலாம். அந்த அளவுக்கு பல வடிவங்களில் கோப்புகள் நிறைய உள்ளன.
நம் கோப்புகளை பிறருக்கு தரும்போது அதனை அவர்கள் விரும்பிய வகையில் விரும்பும் வடிவத்தில் கொடுக்கலாம் அதற்காக பல வகையான மென்பொருள்கள் இணையத்தில் இலவசமாகவும் , கட்டணம் அடிபடயிலும் இருக்கின்றது. அதுமட்டுமல்ல ஆன்லைனில் கூட பல வடிவங்களை மாற்றும் மென்பொருள்கள் செயல்படுகின்றன. அதில் இந்த தளம் பல வசதிகளை தன்னில் கொண்டுள்ளது.
இந்த தளத்தில் நாம் படம் , வீடியோ, ஆடியோ மற்றும் ஆவணங்களையும் பல வடிவங்களில் மாற்றலாம்.இந்த வசதியை பயன்படுத்துவதும் மிகவும் எளிது.
தளத்திற்கு செல்ல : CONVERT FILES
- மேலே உள்ள தளத்திற்கு செல்லுங்கள் பின்னர் அதில் உள்ள BROWSE என்ற பொத்தானை அழுத்துங்கள்
- அதில் உங்கள் கோப்பினை தேர்வு செய்யுங்கள் பின்னர் உங்களுக்கு தேவையான வடிவத்தை தேர்வு செய்யுங்கள்
- பின்னர் CONVERT NOW என்ற பொத்தானை அழுத்துங்கள். அவ்வளவு தான் உங்கள் கோப்பின் வடிவம் மாற்றபடும் அதனை தரவிறக்கி கொள்ளுங்கள்
அதுமட்டுமல்ல இந்த தளத்தில் நாம் நேரடியாக பதிவிறக்க முகவரியையும் கொடுத்து கோப்பின் வடிவத்தை மாற்றலாம். இந்த தளம் மூலம் ZIP,RAR ARCHIVE, PDF, XPS, PPT, போன்ற பல வகையான கோப்புகளின் வடிவத்தையும் மாற்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தளத்தில் உள்ள வடிவங்கள் : Supported Files
0 comments:
Post a Comment