சமீபத்தில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு CCleaner v3.20 பதிப்பு வெளியானது. இதில் மேலதிகமாக மவுஸின் வலது கிளிக் மெனுக்களை மிக இலகுவாக சேர்க்க அல்லது நீக்குவதற்கு ஏற்ற வகையில் புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.
சிசி கிளீனரில் இதைச் செயற்படுத்துவதற்கு, Tools > Startup > Context Menu செல்ல வேண்டும். அங்கே பட்டியலிடப்பட்டுள்ள மென்பொருட்களில் தேவையானதன் மேல் கிளிக் செய்து அவை வலது கிளிக் மெனுவில் வர விரும்பினால் enabled பகுதியில் yes ஐ தெரிவு செய்ய வேண்டும்.
அல்லது அவற்றை முழுவதும் நீக்கிவிட Delete செய்யலாம். எனினும் enable இல் No கொடுத்து விட்டால் அவற்றை விரும்பும் நேரத்தில் மீண்டும் வலது கிளிக் மெனுவில் கொண்டு வந்துவிடலாம்.
0 comments:
Post a Comment