தற்போதைய காலகட்டத்தில் சிறுவர்களிலிருந்து பெரியவர்கள் வரைக்கும் பொழுதுபோக்கிற்காக இணைய விளையாட்டுக்களை பயன்படுத்துவது அதிகரித்து வருகின்றது.
இதனை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு கேம் தயாரிக்கும் நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு புதிய புதிய கேம்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.
அதற்கிணங்க தற்போது Mozilla நிறுவனமானது Browser Quest என்னும் Browserஐ பயன்படுத்தி onlineல் விளையாடக்கூடிய கேம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது கேம் பிரியர்களுக்காகவும், இராணுவத்துறையில் இருப்பவர்களையும் நோக்காக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இருபரிமாணத்தில் HTML5, JavaScript ஆகிய மொழிகளை பயன்படுத்தி இக்கேம் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment