தமிழோசை மன்றம்

Tuesday, January 10, 2012

ஆப்பிளின் ஐபேட் - காமெடி பீஸ்?

ஓவர் சீன் ஒடம்புக்கு ஆகாது? மிகப்பெரிய 'பில்டப்' கொடுத்து பெரிய நட்சத்திரங்களின் தமிழ்ப் படங்கள் வந்து சக்கையாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் போகும் போது நமது தமிழ் வலைப்பதிவர்கள் அதனை துவைத்து காயப்போடுவதை பார்த்திருக்கிறோம். 

அதே போன்ற நிலைமை தற்போது ஆப்பிளின் ஐபேடுக்கும் நேர்ந்திருக்கிறது.ஆப்பிள் நிறுவனமும் ஏதோ ஒன்றை ரிலீஸ் செய்ய போகிறோம் என்று ஒரு மாதமாகவே பில்டப் கொடுத்து வந்ததது. அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். அது அப்படி இருக்குமோ? இப்படி இருக்குமோ? என்று ஆங்கில தளங்களும், வலைப்பதிவர்களும் எழுதி தீர்த்தனர்.

 ஐபேடின் பெருமைகளை அள்ளி விட்டு ஜனவரி 27 அன்று அறிமுகம் செய்தார்கள். மக்களை திருப்தி படுத்தியதா என்ற கேள்விக்கு மெல்ல மெல்ல பதில்கள் வந்து கொண்டு இருக்கின்றன. நேற்று ஆப்பிளின் ஐபேட் விரிவான அறிமுகம் என்று அதன் நிறை குறைகள் பற்றி ஒரு இடுகை எழுதி இருந்தேன். குறைகள் பெரியனவாய் பெரும்பாலானோரை அதிருப்திக்கு உள்ளாக்கி இருப்பதை காண முடிகிறது. 

இதன் பிரதிபலிப்பாக ஹிட்லர் ஆப்பிள் ஐபேடுக்கு எதிராக கொதித்து எழுவதாக வீடியோக்கள் யூடியுபில் வருகின்றன. எப்படியெல்லாம் யோசிக்குறாங்க! காமெடிக்கு கியாரண்டி. நீங்களும் பாருங்கள்.


மேலும் பார்க்க இங்கே செல்லுங்கள்.

0 comments:

Post a Comment

 

alexa rank