கால ஓட்டத்தில் புதிய கண்டுபிடிப்புகளாக Divx, FLV, MP4, MKV என்று வீடியோக்கள் புதிது புதிதாக வடிவங்களில் வருகின்றன. இணையத்தில் பெரும்பாலும் பகிரப்படும் வீடியோக்கள் இந்த வடிவங்களில்தான் வருகின்றன. தரவிறக்கி அவற்றை நீங்கள் பார்க்க முற்படும் போது Codec இல்லை என்ற பிழைச்சொல் வரும். சிலவற்றில் DVD வீடியோக்கள் ஓடாது.
இது போன்ற வீடியோக்கள் திறக்க உங்கள் கணினியில் அவற்றிற்கு ஏற்ற கோடக் (Codec) தேவைப்படும்.விண்டோஸ் இயங்குதளத்துடன் வருவது விண்டோஸ் மீடியா பிளேயர். நீங்கள் திறக்கும் வீடியோ கோப்புகள் இதில் தான் தெரியும். ஆனால் விண்டோஸ் மீடியா பிளேயர் எல்லா வீடியோ வடிவத்திற்கான கோடக்குகளுடன் வருவதில்லை.
அவற்றை இணையத்தில் தேடி உங்கள் கணினியில் நிறுவ வேண்டி வரும். சில சமயம் வேலை செய்யும். பல நேரம் காலை வாரும். பெரிய தலைவலி பிடித்த வேலை இது. புதிதாக கணினி வாங்கிய நண்பர்கள் / உறவினர்கள் அடிக்கடி என்னிடம் கொண்டு வரும் பிரச்சனை இது.
இந்த இம்சையில் இருந்து விடுபட ஒரே வழி விண்டோஸ் மீடியா ப்ளேயரை உபயோகிப்பதை நிறுத்தி விடுங்கள். எல்லா வீடியோ கோப்புகளையும் தடை இன்றி திறக்க ஒரு மென்பொருளை அறிமுகம் செய்கிறேன்.
VLC Media Player. கணினிக்கான மிகச்சிறந்த மீடியா பிளேயர் இது. இதற்கென நீங்கள் எந்த வீடியோ கோடக்குகளையும் தனியே நிறுவ வேண்டியதில்லை. எல்லாம் உள்ளடங்கியே வருகிறது. அடிக்கடி மேம்படுத்தப்பட்டு வருவதால் அனைத்து விதமான வீடியோவையும் திறக்கிறது.
இது முற்றிலும் இலவசம். தற்சமயம் ஒரு வினாடிக்கு பதினேழுக்கும் மேற்பட்டோர் இதனை தரவிறக்குவதாக அவர்கள் இணையதளத்தில் குறிப்பிட்டு உள்ளார்கள். இது விண்டோஸ், லினக்ஸ், மேக் ஓஎஸ் என்று பெரும்பாலான இயங்குதளங்களில் வேலை செய்யும். இந்த சுட்டிக்குசென்று உங்கள் கணினி இயங்குதளத்திற்கு ஏற்ற விஎல்சி மீடியா ப்ளேயரை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.
இனி 'கணினியில் இந்த வீடியோ திறக்க மாட்டேன் என்கிறது' என்ற பிரச்னைக்கு முடிவு காட்டுங்கள். இணைய உலாவிகளில் பயர்பாக்ஸ் எப்படி இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு மாற்றாக உள்ளதோ அது போல் விண்டோஸ் மீடியா ப்ளேருக்கு மிகச்சிறந்த மாற்று விஎல்சி மீடியா பிளேயர். இது ஒவ்வொருவர் கணினியிலும் காட்டாயம் இருக்க வேண்டிய மென்பொருள்.
விஎல்சி மீடியா பிளேயர் வீடியோ பார்ப்பதற்கு மட்டுமல்லாமல் வீடியோக்களை வெட்டுவது, இணைய ஒளிபரப்புகளை பார்க்க, வீடியோ கன்வெர்ட் செய்ய, உங்கள் வீடியோக்களை இணையத்தில் நேரடியாக ஒளிபரப்ப, உங்கள் கணினி ஸ்க்ரீன் காட்சிகளை பதிவு செய்ய என பல விதங்களில் பயன்படுகிறது. தற்சமயம் வீடியோ பார்ப்பதற்கு மட்டும் பயன்படுத்துங்கள். விஎல்சியின் சிறப்பு வசதிகளை விளக்கமாக தனித்தனி இடுகைகளாக அடிக்கடி எழுதுகிறேன்.
Home » tharavirkam » எல்லாவிதமான வீடியோக்களையும் கணினியில் காண
Tuesday, January 10, 2012
எல்லாவிதமான வீடியோக்களையும் கணினியில் காண
lainnya dari tharavirkam
- கொசுவை விரட்டும் மென்பொருள்
- Serif MoviePlus X6 v14.0.0.020-FOSI வீடியோ இலகுவாக hd தரத்தில் edit செய்ய ஒரு மென்பொருள் இலவசமாக
- FarStone Total Recovery Pro v8.1 Incl Keymaker-CORE உங்கள் கணனியின் அழிந்த file களை தேடித்தரும் மென்பொருள் முற்றிலும் இலவசம்
- Xilisoft HD Video Converter v7.3.0.20120529 Multilanguage-LAXiTY இலவசமாக தரவிறக்க
- இணையத்தளங்களிலிருந்து MP3 பாடல்களை இலகுவாக தரவிறக்கம் செய்வதற்கு
- வித விதமான 500 தமிழ் எழுத்துருக்கள் (fonts ) - இலவச தரவிறக்கம்
- bit defender internet security 2012 இலவசம் original license
Ditulis Oleh : tamilosaii-soft // 7:43 AM
Kategori:
tharavirkam
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment